வெள்ளி, 27 மார்ச், 2020

வெல்வோம் கொரானாவை

இனியொரு விதிசெய்வோம்
இன்முகத்துடன் அதை ஏற்போம்

இறைவன் படைத்தான் இயற்கை
இதயமின்றி கெடுத்தோம்
                       அதனழகை

உழுகின்றவனுக்கு நிலம் சொந்தம்
                          என்கின்ற நாம்
வாழும்உயிரினங்களின்
இடம் அதற்கு சொந்தம்என்பதை
                                மறந்தோம்
பாழும் கொரானா கிருமி தாக்கிட
       மனிதகுலம் நடுங்கியே அஞ்சும்
விழுகின்ற மாந்தரும் போக்கிடம்
              ஆயினர் வீட்டினில் தஞ்சம்

ஆலைகள் ஓய்ந்தன
              வேலைகள் நின்றன
சாலைகள் வெறிச்சோடின
      சோலையாய்இல்லம் ஒளிர்ந்தன

பறவைகள் தன்னிடம்விட்டுவந்தன
இரைதேடி சுதந்திரமாய் பறந்தன
நீர்நிலைகளில் மீன்களின் ஆட்டம்
நிலங்களில் கால்நடைகள்
                                    கொண்டாட்டம்

ஊஹானில் துவங்கியது
                       இந்த உயிர்யுத்தம்
ஓ ஓ வென உலகின் நாடுகளில்
                  எழுந்தது பெருஞ்சத்தம்
ஓடியோடி உழைத்ததால்
                 ஓய்ந்தது இன்று உலகம்
தேடியவளம் குறையவே உலகில்
              தேய்ந்தது பொருளாதாரம்

தொட்டுவிட தொடர்கிறது கண்
                பட்டுவிட படர்கிறது
தொடங்கிய இடம் மட்டுமன்றி
    தொடர்ந்தும்          
               நாடுகளில்வாழ்கிறது

தடுத்திட தடுப்பேதும் இல்லை
தடுப்பாட்டம் ஆட முயல்கிறோம்
தடைகளாய் ஒருசிலர்       
                           சுற்றுகின்றார்
அடைபட்டோர்சுகமாய்
                             இருக்கன்றார்

நோய் கண்டனர் இலட்சத்தில்
உயிர்மாண்டனர் நோய்உச்சத்தில்
அதில்மீண்டனர் மிகசொச்சத்தில்
நலம்நாடுவோர் அவரவர்   
                                     இல்லத்தில்

அரசு எடுக்கும் முயற்சி பரிகாரம்   
                                         தேடி
அரசுத்துறையினர் துணையிருப்பர்
                                      அதை நாடி
அடக்கிடுவோம் நோயை அடித்து
                                         விரட்டி
அவனியைக் காப்போம்
        தனிமனிதனைக் கட்டுப்படுத்தி

வியாழன், 26 மார்ச், 2020

கற்பக விநாயகர்

அற்புதங்கள்நிகழ்த்தும்
                        ஆனந்தகளிறாம்
கற்பக விநாயக
               கழலினைப் பணிவோம்

மூவருக்கும் முதன்மை
                         தெய்வம் அவன்
யாவரையும் காக்கும்
                           நாதன் அவன்
தேவர்குலம் தழைக்க
                           அருளியவன்
மாந்தர்குலத்தினை
                          வாழவைப்பான்.

கற்பவை யாவும் அவனது
                                       அருளே
பொற்சபை நடனநாயகன்
                                        மகனே
முற்பிறவி வினை அறுப்பான்
                                     அவனே
சற்குருவாய்என்னைகாக்கும்
                                    துணையே

             .        சிவதாசன் .பாஸ்கர்